Wednesday, May 14, 2014
அ
Wednesday, July 20, 2011
சில நொடி நட்பு!!!
Monday, November 29, 2010
ஆதியும் அந்தமும்
என்னென்று தெரியாமல்....
இது தான் அழுகை என்று கூடத் தெரியாமல்...
நீ கிடந்து அழுகும் பொது...
உன் கண்ணீரை நிறுத்தப் பிரயத்தனப் பட்டு கொண்டிருக்கும்
ஒரு உயிர்... உன் இடபக்கமோ வலப்பக்கமோ...
கால ஏணி - ஏறிச் சலித்த பின்....
இயற்கையும் செயற்கையும் உனை மென்று தின்று...
.
"பிரயோசனம்" அற்ற சக்கையாய்,
உலகக் கழிவுகளின் கணக்கில் சேர்த்த பின்னும்,
என்னென்று தெரியாமல்....
இது தான் அழுகை என்று கூடத் தெரியாமல்...
நீ கிடந்தது அழுகும் போது...
உன் கண்ணீரை நிறுத்தப் பிரயத்தனப் பட்டு கொண்டிருக்கும்
ஒரு உயிர்... உன் இடபக்கமோ வலப்பக்கமோ...
Friday, November 19, 2010
Thursday, April 30, 2009
தூது
கடல் கொண்ட அத்தனை துளியும் அலையாய்;
ஒருமுறையேனும் கரையை தொட்டிருக்கும்..
நான் அனுப்பிய அத்தனை அலையில்
ஒன்றுகூடவா உன்னைத் தொடவில்லை?
அத்தனை உயிரும் ஒன்றுதான்..
ஒத்துகொண்டேன் உன்னை பார்க்கும் வரை...
நீ கொஞ்சம் உயர்வு தான்...
வார்த்தைகளின் அர்த்தம்
மாறியது...
ஆழமானது...
அழகானது...
உயிர்..
நான்..
நீ..
இன்னும் பல...
நண்பர்களின் கூட்டத்துக்குள்
நான் மட்டும் தனியாய்..
பேச்சுப் போட்டியில்..
மௌனமாய் நிற்பது போல்
உன்முன்னே நான்....
வாழ்க்கை ஆயிரம் கேள்விகளானது..
ஒரே பதிலாய்
நீ ....
ஒத்துக்கொள்ள வேண்டாம்...
புரிந்துகொண்டாள் போதும்...
Subscribe to:
Comments (Atom)




