Thursday, April 30, 2009

தூது

கடல் கொண்ட அத்தனை துளியும் அலையாய்; 
ஒருமுறையேனும் கரையை தொட்டிருக்கும்.. 
நான் அனுப்பிய அத்தனை அலையில் ஒன்றுகூடவா உன்னைத் தொடவில்லை?

அத்தனை உயிரும் ஒன்றுதான்.. 
ஒத்துகொண்டேன் உன்னை பார்க்கும் வரை... 
நீ கொஞ்சம் உயர்வு தான்... 

வார்த்தைகளின் அர்த்தம் மாறியது... ஆழமானது... அழகானது... உயிர்.. நான்.. நீ.. இன்னும் பல... 

நண்பர்களின் கூட்டத்துக்குள் நான் மட்டும் தனியாய்.. பேச்சுப் போட்டியில்.. மௌனமாய் நிற்பது போல் உன்முன்னே நான்.... வாழ்க்கை ஆயிரம் கேள்விகளானது.. ஒரே பதிலாய் நீ .... ஒத்துக்கொள்ள வேண்டாம்... புரிந்துகொண்டாள் போதும்...