Monday, November 29, 2010

ஆதியும் அந்தமும்

என்னென்று தெரியாமல்....
 இது தான் அழுகை என்று கூடத் தெரியாமல்... 
நீ கிடந்து அழுகும் பொது...
 உன் கண்ணீரை நிறுத்தப் பிரயத்தனப் பட்டு கொண்டிருக்கும் ஒரு உயிர்... உன் இடபக்கமோ வலப்பக்கமோ... 

 கால ஏணி - ஏறிச் சலித்த பின்.... 
இயற்கையும் செயற்கையும் உனை மென்று தின்று...
. "பிரயோசனம்" அற்ற சக்கையாய்,
 உலகக் கழிவுகளின் கணக்கில் சேர்த்த பின்னும்,
 
என்னென்று தெரியாமல்.... இது தான் அழுகை என்று கூடத் தெரியாமல்... நீ கிடந்தது அழுகும் போது... உன் கண்ணீரை நிறுத்தப் பிரயத்தனப் பட்டு கொண்டிருக்கும் ஒரு உயிர்... உன் இடபக்கமோ வலப்பக்கமோ...

Friday, November 19, 2010

ரகசியங்கள்

சத்தமிடாத முத்தங்களாய்.. உன் பார்வைகள்...