என்னென்று தெரியாமல்....
இது தான் அழுகை என்று கூடத் தெரியாமல்...
நீ கிடந்து அழுகும் பொது...
உன் கண்ணீரை நிறுத்தப் பிரயத்தனப் பட்டு கொண்டிருக்கும்
ஒரு உயிர்... உன் இடபக்கமோ வலப்பக்கமோ...
கால ஏணி - ஏறிச் சலித்த பின்....
இயற்கையும் செயற்கையும் உனை மென்று தின்று...
.
"பிரயோசனம்" அற்ற சக்கையாய்,
உலகக் கழிவுகளின் கணக்கில் சேர்த்த பின்னும்,
என்னென்று தெரியாமல்....
இது தான் அழுகை என்று கூடத் தெரியாமல்...
நீ கிடந்தது அழுகும் போது...
உன் கண்ணீரை நிறுத்தப் பிரயத்தனப் பட்டு கொண்டிருக்கும்
ஒரு உயிர்... உன் இடபக்கமோ வலப்பக்கமோ...

